, , ,
PM Modi

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. இதயம் கனத்துள்ளது.! மன்னிக்கவே மாட்டோம்.! பிரதமர் மோடி கடும் கண்டனம்.! 

By

இன்று மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் நாடளுமன்ற வந்துள்ள பிரதமர் மோடி செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், மணிப்பூர் சம்பவம் பற்றி தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

அவர் கூறுகையில், மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையையே கொடுத்துள்ளது. எனது இதயம் கனத்துள்ளது. மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடூரத்தை என்றும் மன்னிக்க மாட்டோம். இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டு பேசினார்.

இன்று முதல் ஆகஸ்ட் 11 வரையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் துவங்க உள்ளது.

Dinasuvadu Media @2023