ஆதிபுருஷ் திரைப்படத்திற்காக அனுமனின் இருக்கையில் அமர்ந்த நபருக்கு அடி உதை… வீடியோ வைரல்.!

By

Adipurush hanuman

ஹைதராபாத்தில் ஆதிபுருஷ் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நபர், அனுமன் இருக்கையில் அமர்ந்ததற்காக தாக்கப்பட்டுள்ளார்.

பாகுபலி பிரபலம் பிரபாஸ் நடிப்பில் ராமாயண இதிகாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் திரைப்படத்தை திரையிடும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஒரு இருக்கை அனுமனுக்காக காலியாக  விடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து அனுமனுக்காக ஒரு இருக்கையை ஒதுக்கி, திரைப்பட தயாரிப்பாளர்களின் கோரிக்கையை திரையரங்க நிர்வாகமும் நிறைவேற்றியுள்ளனர். அனுமனின் இருக்கையில் காவி துணி, பழங்கள் மற்றும் அனுமன் சிலை கூட அலங்கரிக்கப்பட்டிருந்ததாக அதிகாலை படம் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரம்மராம்பா திரையரங்கில் அனுமனின் இருக்கையில் அமர்ந்ததற்காக ஒரு நபர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடீயோவை ட்விட்டரில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.