மின்சார கட்டணம் ரூ .40,000 க்கு மேல் வசூலித்ததால் நாக்பூரில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை.!

3 மாத ஊரடங்கு காலத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ .40,000 மின்சார கட்டணத்திற்கு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

நாக்பூரில் தற்கொலை முயற்சி:

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள 57 வயதான ஒருவர் 3 மாதங்களாக ஊரடங்கு காலத்திற்கு மின்சார வாரியத்தால் வசூலிக்கப்பட்ட ரூ .40,000 கட்டணத்தை செலுத்த வழியில்லாமல் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.

இதே போல் நாக்பூரில் உள்ள அகஷ்வானி சதுக்கத்தில் உள்ள மனோஜ்  என்ற 42 வயது நபர் ஒரு மொபைல் போன் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துவிடுவதாக அச்சுறுத்தியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

 தீயணைப்பு அதிகாரி ராஜேந்திர உச்சேவின் ஐந்து மணிநேர பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்பு கமிஷனர் பி.கே. உபாத்யாய்டோ உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அந்த நபரை பாதுகாப்பாக காப்பாற்றினர்.

நாக்பூரில் வசிப்பவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது .

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.