சொந்த ஊரை அடைய அரசு பேருந்தை திருடியவர் கைது!

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியூரில் சிக்கிக்கொண்ட இளைஞர் சொந்த ஊரை அடைவதற்காக

By Rebekal | Published: May 23, 2020 05:52 PM

கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியூரில் சிக்கிக்கொண்ட இளைஞர் சொந்த ஊரை அடைவதற்காக அரசு பேருந்தை திருடிய இளஞ்சரை போலீசார் கைது செய்துள்ளனர். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டு செல்லும் நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்றவர்கள் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஆந்திரா பனிமலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்த முஜாமி கான் என்பவர் சிக்கி கொண்டதால், அங்கிருந்து சொந்த ஊரான கர்நாடகாவை அடைய ஆந்திரா மாநிலத்திலுள்ள அனந்தப்பூர் மாவட்டம் தர்மவரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடி சென்றுள்ளார்.

சம்பவம் அறிந்த காவல் துறையினர் அனைவர்க்கும் தகவல் கொடுக்கவே, சிக்கப்பள்ளி போலீசார் கியா தொழிற்சாலை அருகே பேருந்தை மடக்கி பிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். 

அதாவது, ஊரடங்கால் ஆந்திராவில் மாட்டிக்கொண்ட அவர், சொந்த ஓர் செல்வதற்காக நடை பயணம் மேற்கொண்டதாகவும், வழியில் இருந்த அரசு பேருந்தை கண்டதும் யாரு நிறுத்தமுடியாது என்ற தைரியத்துடன் எடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார். 

Step2: Place in ads Display sections

unicc