மேற்கு வங்கத்தின் துணை பெண் நடுவர் மரணம் – கொரோனா போராளி புகழாரத்துடன் மம்தா பானர்ஜி இரங்கல்!

மேற்கு வங்கத்தின் துணை பெண் நடுவராகிய (deputy magistrate)டெபட்டா கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்ததற்கு, கொரோனவை எதிர்கொண்ட முதல் போராளி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகழாரத்துடன் இரங்கல்.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், மேற்கு வங்கத்தின் துணை நடுவராகிய (deputy magistrate) டெபட்டா மற்றும் அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

தற்பொழுது அவரது கணவர் குணமாகி நல்ல உடல் நலத்துடன் உள்ளார், அதே சமயம் சிகிச்சை பலனின்றி துணை நடுவர் டெபட்டா மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு மேற்கு வங்கத்தின் முதல்வராகிய மம்தா பானர்ஜி, கொரோனாவாய் வென்ற முதல் அரசு போராளி என புகழாரம் சூடியதுடன், அவரது மறைவுக்கு திறன்களும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal