பாஜக சவாலை ஏற்று நந்திகிராமத்தில் போட்டி., 294 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மம்தா.!

பாஜக சவாலை ஏற்று நந்திகிராமத்தில் போட்டி., 294 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மம்தா.!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. இறுதி மற்றும் 8ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் மே 2ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 294 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஒரே கட்டமாக முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். இதில் பட்டியல் மற்றும் பழங்குடியின வேட்பாளர்களையும் திரிணாமுல் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களில் பெண்கள் 50 பேர், இஸ்லாமியர்கள் 42 பேர், தாழ்த்தப்பட்ட சமுகத்தில் 79 பேர், பழங்குடியினர் 17 பேர் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 80 வயதிற்கு அதிகமானவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது பதிவில் இருக்கும் 27 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என பல அதிரடியான விஷயங்களை வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது மம்தா பாணர்ஜி தெரிவித்துள்ளார். பாஜகவின் ஏற்று மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிக்க இருகட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் முக்கிய கட்சிகளாக உள்ளன என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube