,

மானுடத்தின் திசை திறக்க வருகிறான் மாமன்னன்..! வெளியானது தரமான ட்ரைலர்..!

By

MaamannanTrailer

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வடிவேலு அவரது அப்பா கதாபாரத்தில் அரசியல் வாதியாக நடித்து மிரட்டி உள்ளார். திரையுலகில் இத்தனை வருடமாக சிரிக்க வைத்த வடிவேலு இன்று ரக்கட் (Rugged) லுக்கில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினினுக்கு இது கடைசி படமாக இருந்தாலும் தரமான சம்பவமாக இந்த திரைப்படம் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், படத்தில் பஹத் பாசில் எப்போதும் போல் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் என்றே சொல்ல வேண்டும்.

இத்திரைப்படத்தின் தரமான ட்ரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும், இத்திரைப்படம் வரும் ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.