எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா!

Default Image

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார் மல்லிகார்ஜுன கார்கே. ஒருவருக்கு ஒரு பதவிதான் என்று அண்மையில் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்.17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தலில் போட்டியிடும் 3 பேரில் யாரும் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இல்லை. அவர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள். இதில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

Join our channel google news Youtube