ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கைது – மாலியில் இராணுவ ஆட்சிக்குழு அதிரடி நடவடிக்கை

பத்து வருடங்களுக்கு மேலாக மாலியில் தொடரும் ஆட்சியாளர்கள் கைது….மாலியில் தொடரும் நிலையற்ற ஆட்சி !

மாலியின் தலைநகரமான பமாகோ நகரில் மே 25 ஆம் தேதியன்று மாலியின் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி பஹ்ந்தாவ், பிரதமர் மொக்டார் ஓவானே மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சோலிமன் டௌகூர் ஆகியோரை மாலியில் உள்ள இராணுவ ஆட்சிக்குழு கைது செய்துள்ளது.

அதாவது முன்னாள் பாதுகாப்பு மந்திரி பஹ்ந்தாவ் பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார், மேலும் முன்னாள் வெளியுறவு மந்திரி ஓவானே 18 மாத காலத்தை மேற்பார்வையிட இடைக்கால பிரதமரானார், இது மாலியை புதிய தேர்தல்களுக்கு முன்னதாகவே சிவில் ஆட்சிக்குகீழ் வருவதற்கு வழிவகுத்தது,மேலும் மாலியின் இடைக்கால அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் ராஜினாமா செய்தது, மேலும் நாட்டின் இடைக்கால ஜனாதிபதி பஹ்ந்தாவ், புதிய அரசாங்கத்தை அமைக்க இடைக்கால பிரதமர் ஓவானுக்கு அறிவுறுத்தியதாக, ஸ்பூட்னிக் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஐ.நா மாலியின் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து, ஆட்சி மாற்றத்தை ஆதரிப்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதால் ஜனாதிபதி மற்றும் பிரதமரை உடனடியாகவும் நிபந்தனையுமின்றி விடுவிக்குமாறும் இராணுவ ஆட்சிக்குழுவிடம் கோரியுள்ளதாக தெரிவித்திருந்தது.

மேலும் 2020 ஆகஸ்டில் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் கைது செய்வதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்த பின்னர், ஜனாதிபதி ராஜினாமா செய்ததுடன் நாட்டின் பாராளுமன்றம் மற்றும் அரசாங்கத்தை கலைப்பதாக அறிவித்தார் என ரஷ்யா நியூஷ் ஏஜென்ஷி தெரிவித்துள்ளது.