இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகள் மாலத்தீவிற்குள் வர தடை – மாலத்தீவு அரசு

தெற்காசிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நோ என்ட்ரி !

உலகளாவிய கொரோனா பாதிப்பில் இந்தியா மிகவும் மோசமான சூழலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது, இந்நிலையில் பல்வேறு நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள், பயனிகள், உள்ளிட்டவைகளுக்கு அந்நாடுகளுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாலத்தீவிற்குள்ளும் வர இந்திய உள்ளிட்ட பிற தெற்காசிய நாடுகளுக்கும் மாலத்தீவு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது,

எனவே, இந்த தடையானது ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இருந்து வரும் பயணிகளுக்கு பொருந்தும், மேலும் இந்த நாடுகளிலிருந்து அனைத்து வகை விசா வைத்திருப்பவர்களும் தற்காலிகமாக மாலத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த தடை மே 13 முதல் அமலுக்கு வரும் எனவும், மேலதிக அறிவிப்பு வரும் வரை தடையானது நடைமுறையில் இருக்கும் எனவும் மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது

இருப்பினும் அனுமதி பெற்ற சுகாதார நிபுணர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது, சுகாதார வல்லுநர்கள் மாலத்தீவுக்கு புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் மாதிரியுடன் நெகட்டிவ் முடிவை வைத்திருக்க வேண்டும் மற்றும் 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருக்க வேண்டும் எனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.