நிதி பற்றாக்குறையால் ரயில்வே திட்டத்தை கைவிடும் மலேசியா…!!

அரசின் நிதி ஆதாரம் போதிய அளவில் இல்லாததால் அரசின் திட்டங்களை கைவிடுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

அண்டை நாடுகளை இணைக்கும் வகையிலான புதிய திட்டங்களை மலேசியா அரசு முன்னெடுத்து வந்தது.குறிப்பாக 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டத்தை சீன அரசின் நிதியுதவியுடன்  செயல்படுத்த சீன நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கி இருந்தது.

இந்நிலையில் , முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவரின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த இந்த திட்டம் வெளிப்படை தன்மை இல்லை என்று குற்றசாட்டு எழுப்பி , போதிய நிதி இல்லாததால் ரயில்வே திட்டத்தை கைவிடுவதாக அந்நாட்டு நிதி அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment