சூரரைப்போற்று திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ..!

சூரரைப்போற்று திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. 

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியவுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த மே மாதம் 1ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வருகின்ற அக்டோபர் மாதம் 30 ம் தேதி அமேசான் பிரேமில் வெளியவதாக ஆதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகியது.

மேலும் தற்பொழுது இந்த சூரரைப்போற்று திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த மேக்கிங் வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.