வெயில் காலம் வந்துட்டு.! உங்க வீட்டை இப்படி கூலா வச்சுக்கோங்க.!

இந்த கோடைகாலத்தில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்கிறீர்கள்?கோடைகாலத்தில் இயற்கையாகவே உங்கள் வீட்டை எவ்வாறு குளிர்ச்சியாக வைத்திருப்பது என்பது இதில் பாருங்கள்.

மே மாசம் வந்தாலே உச்சி முதல் உள்ளங்கால் வரை கோடை வெயில் வாட்டி எடுக்கும். வீட்டின் உள்ளே இருப்பதே ரொம்ப சிரமமாக இருக்கும். கோடை வெயில் உங்கள் வீட்டை தட்டும் நேரம் வந்துவிட்டது. வாட்டி எடுக்கும் சூரியன், நம் உடம்பில் வியர்வை சங்கடமான இரவுகள் மற்றும் பலவற்றைப் பற்றி உங்களுக்கு நேபகம் வரும் இந்த வார்த்தை போதுமானது.

இந்த நநேரத்தில் மீண்டும் மீண்டும் குளிப்பது மற்றும் குளிர்ந்த நீர் சில நேரத்தில் உங்களுக்கு உதவுகிறது . உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் பள்ளி அல்லது விளையாட்டு மைதானத்திலிருந்து திரும்பிய பிறகு ஏசி அறைக்குள் போக விரும்புவார்கள். இந்த நடைமுறையானது கோடைகாலத்தைப் பற்றிய ரொம்ப மோசமான விஷயமாகும்.

இதனால் அவர்கள் இருமல், சளி மற்றும் காய்ச்சலால் கூட பாதிக்கப்படலாம். இது மட்டுமமில்லை ஏசியின் குளிர்ந்த காற்று உங்கள் சருமத்தை உலர வைக்கிறது. ஆனால் கோடைகாலத்தில் இயற்கையாகவே உங்கள் வீட்டை எப்படி குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்று அதை பற்றி பின்பற்றுங்கள். கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க சில இயற்கை வழிமுறைகள் மூலம், எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் இந்த ஆண்டு சிறிது நிவாரணம் பெறலாம்.

உங்கள் வீட்டின் எந்தப் பகுதியில் இயற்கையான காற்றோட்டம் இருக்கிறது என்பதைக் தேர்ந்தெடுங்கள். உங்கள் வீட்டை நோக்கி எந்த திசையில் காற்று வீசுகிறது என்பதைக் கவனித்த, அந்த பக்கத்தின் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்கலாம். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உங்கள் அறைகள் காற்றோட்டமாக இருக்கும்.

உங்கள் வீட்டின் ஜன்னல்களை சில நேரங்களில் திறந்து வையுங்கள். ஆனால் பகல் நேரத்தில் இல்லை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு திறந்து வையுங்கள். ஏன்னென்றால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, வெப்பநிலை சிறிது குறையும் போது, குளிர்ந்த காற்று மற்றும் பெரும்பாலும் வருமாம். காற்று வீட்டின் உள்ளே நுழைய மாலையில் உங்கள் ஜன்னல்களைத் திறக்க வைக்க வேண்டும்.

வெள்ளை துணி உங்கள் அறைக்கு ஒரு இனிமையான விளைவைக் கொடுக்கும். உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உங்கள் வீட்டில் மரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் புதர்களை வைக்கலாம். உங்கள் வீட்டிற்கு நேரடியாக சூரிய ஒளி வருவதைத் தடுக்க கிழக்கு-மேற்கு திசையில் நிழல் தரும் மரங்களை நடலாம். குளிரான நிலையை பெறுவதற்கு உங்கள் வீட்டைச் சுற்றி புல் நட வேண்டும்.

இந்த கோடையில் வீட்டை எப்படி குளிர்ச்சியாக வைத்திருப்பது என்பதை சிறந்த செயல்முறைகளில் ஒன்றாக இது இருக்கலாம் பாருங்கள். குளிர்காற்றை உருவாக்குங்கள் ஐஸ் கட்டிகளை ஒரு கிண்ணத்தை விசிறியின் கீழ் வைத்து விசிறியை இயக்கலாம் அதன் மூலம் இனைமையான குளிர்ந்த காற்று வரும்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.