• விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்தில் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
  • செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செவ்வாய் கிரகத்தில் பல வகையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு அடியில் பரந்த நீர்ப்பரப்பு இருப்பதை உறுதி செய்துள்ளது.

மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர்

Image result for மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் விண்கலத்தைஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் 2003ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இந்த விண்கலம் அங்கிருந்து தொடர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

 

செவ்வாய் கிரகத்தில் நீர்

Image result for மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் விண்கலத்தைஇந்நிலையில், அந்த விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 4,000 முதல் 5,000 மீட்டர் ஆழத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில், செவ்வாய் கிரகத்தின் நிலத்தின் மேற்பரப்பில் சகதி போன்ற அமைப்பு இருப்பது அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. .