இந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமா பொங்கல் செய்து பாருங்க!

பொங்கல் திருநாளில் சத்தான, சுவையான தினை சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

பொங்கல் திருநாள் என்றாலே, நமது வீடுகளில் விதவிதமான பொங்கல் வகைகளை செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில், சத்தான, சுவையான தினை சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • தினை அரிசி – கால் கிலோ
  • பாசிப்பருப்பு – 50 கிராம்
  • வெல்லம் – கால் கிலோ
  • முந்திரி – 8
  • – திராட்சை 8
  • நெய் – தேவைக்கேற்ப
  • பால் – 1 கப்
  • தேங்காய் துருவல் – கால் கப்
  • ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். திணை அரிசி, பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வறுத்த பாசிப் பருப்பை முதலில் போடவேண்டும். பாசிப்பருப்பு, அரைப் பதம் வெந்தவுடன் திணை அரிசியை போட்டு குழைய வேக விடவேண்டும். பின்பு எல்லாம் சேர்த்து நன்கு கிளறி விட்டு, அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும். இப்போது சுவையான தினை சர்க்கரைப் பொங்கல் தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.