பிரட் இருக்கா….? டீ போடும் நேரத்தில் இந்த போண்டாவை செய்து குடுங்க…!

காலை, மாலை எப்பொழுது வேண்டுமானாலும் டீ, காபி குடிக்கும்போது ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சூடாக சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இந்த எண்ணம் இருக்கும். இதற்காக நாம் கடைகளில் முறுக்கு, வடை என செலவு செய்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அட்டகாசமான பிரட் போண்டாவை தயாரித்து சாப்பிடலாம். இந்த போண்டாவை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய்
  • முந்திரி
  • ஏலக்காய்த்தூள்
  • பால்
  • சர்க்கரை
  • உலர் திராட்சை
  • பிரட்

செய்முறை

முதலில் மிக்சி ஜாரில் தேவையான அளவு பிரட்டை துண்டு துண்டாக உடைத்து சேர்த்து கொள்ள வேண்டும், இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் அரைத்து விட்டு எடுத்து விடவேண்டும், தேங்காய் துருவலும் பிரட்டும் நன்றாக அரைந்த பின்பு இந்த கலவையை ஒரு பௌலில் கொட்டி இதனுடன் உப்பு, தேவையான அளவு சர்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பதாக முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் பால் கால் டம்ளர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு இதை பிசைய வேண்டும். அதன்பின் இவற்றை சிறிய சிறிய உருண்டைகளாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி நன்றாக கொதித்ததும் மிதமான தீயில் வைத்து இந்த உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான ஸ்நாக்ஸ் வீட்டிலேயே தயார். செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

author avatar
Rebekal