பிக்பாஸ் சீசன் 4 குறித்த முக்கிய அறிவிப்பு.! தொகுப்பாளரில் மாற்றமா.?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தாமதமாக ஆரம்பிக்கப்படும் என்றும்,

By ragi | Published: Jun 11, 2020 10:26 AM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தாமதமாக ஆரம்பிக்கப்படும் என்றும், கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ. பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்ற மாபெரும் நிகழ்ச்சி பிக்பாஸ். . இதுவரை 3 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. அதனையடுத்து சமீபத்தில் 4வது சீசன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பிக்பாஸ் சீசன் 4 இருக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் நான்காவது சீசனுக்கு தொகுப்பாளராக கமல்ஹாசன் இல்லை என்ற தகவலும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4 கண்டிப்பாக துவங்கும், ஆனால் துவங்க சிறிது தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமின்றி, நான்காவது சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க போவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் வீட்டிற்கும் போட்டியாளர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த முறை பலத்த பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc