பேட்ட சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கான படம்!!நடிகர் மகேஷ் பாபு !!!

ரஜினியின் ‘ பேட்ட ‘ படம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று பிரம்மாண்டமாய் வெளிவந்தது. இந்நிலையில் ரசிகர்கள் இந்த படத்தை வெற்றிகரமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பல முக்கிய பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் மகேஷ் பாபு இந்த படத்தை பார்த்து , இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கான படம் இந்த படத்தில் தலைவர் மிகவும் அருமையாக நடித்துள்ளார். மேலும் நானும் அவரின் மிக தீவிர ரசிகன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இயக்குனர் சுப்புராஜ் மிக சிறந்த இயக்குநர் நன்றாக படத்தை இயக்கியுள்ளார். மேலும் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.