2 கிமீ தூரம் தாண்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.! – காவல்துறை அதிரடி அறிவிப்பு.!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் மட்டுமே செல்லலாம்.

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநில காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் செல்லலாம்.அதனை தாண்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

இருப்பினும் இ-பாஸ் அனுமதி பெற்று முக்கியமான வேலைகளுக்கு செல்பவர்கள் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரையில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.