பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்!

பாபா ராம்தேவுக்கு எச்சரிக்கை விடுத்த மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறதா நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, கரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், கரோனில் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் அந்த மாத்திரை, ஸ்வாசரி எனும் ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கரோனா நோய் குணமடையும் என்றும் அறிவித்திருந்தார்.

ஆனால், இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. ககொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை தவறான முறையில் வழிநடத்தும் பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தனது ட்வீட்டர் பக்கத்தில் பாபா ராமதேவுக்கு எச்சரிக்கை விடுத்தது ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கரோனில் மருந்து கொரோனா வைரஸைக் குணப்படுத்துமா என்பதை ஜெய்ப்பூரில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனம் கண்டுபிடிக்கும்.

பாபா ராமதேவுக்கு எச்சரிக்கை விடுத்தது சொல்கிறேன், மகாராஷ்டிராவில் கரோனாவைக் குணப்படுத்தும் போலியான மருந்துகளை விற்க அனுமதிக்கமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.