மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 230 ஆக அதிகரிப்பு.!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு

By balakaliyamoorthy | Published: Mar 31, 2020 02:17 PM

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேர் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று மட்டும் மகாராஷ்டிராவில் 10 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 230 ஆக அதிகரித்துள்ளது. முதலில் மும்பையில் ஒருவருக்கும், புனே மற்றும் புல்தானா பகுதிகளில் தலா இருவருக்கும் என மொத்தமாக 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்த நிலையில், தற்போது மும்பையில் மேலும் 4 பேருக்கும், புனேவில் மேலும் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc