சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கு உத்தவ் தாக்கரே வேட்புமனுத்தாக்கல்.!

மகாராஷ்டிரா  முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சட்டமேலவை உறுப்பினர் போட்டியிடுவதற்காக  வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

மகாராஷ்ட்ராவில் கடந்த ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்டு  சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன்  கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தநிலையில், சிவசேனாத் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக  பொறுப்பை ஏற்றார்.

அரசியல் சட்டப்படி  சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாத ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் பதவியேற்ற 6 மாத காலத்திற்குள் இரு அவைகளில் ஏதாவது ஒன்றின் உறுப்பினராக பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் முதலமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விடுவார்.

வரும் மே மாதம் 27-ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 6 மாதங்கள் முடியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் காலியாக உள்ள 9 சட்டமேலவை உறுப்பினர் இடங்களுக்கு கடந்த 24-ம் தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனாவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து, வரும்  21-ம் தேதி சட்டமேலவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், இன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சட்டமேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

author avatar
Dinasuvadu desk