தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இணையத்தில் வெளியிட தடை!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது இவர்போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தயாரிப்பாளர் போனி கபூர் நேர்கொண்ட பார்வை படத்தை இணையத்தில் வெளியிடுவதை தடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட் இப்படத்தினை இணையத்தில் வெளியிட இணையதள சேவை நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.