தமிழகத்தில் இருந்து கர்நாடகா வர தடை இல்லை! ஆனால், கட்டயம் தனிமைப்படுத்தப்படுவீர்கள்!

தமிழகத்தில் இருந்து கர்நாடகா வர தடை இல்லை! ஆனால், கட்டயம் தனிமைப்படுத்தப்படுவீர்கள்!

தமிழகத்தில் இருந்து கர்நாடகா வர தடை இல்லை. ஆனால், கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா அச்சுறுதலால், மஹாராஷ்டிரா, தமிழகம், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து, ஜூன்-15ம் தேதி வரை கர்நாடகாவுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, தற்போது இந்த விதிமுறையை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கர்நாடகா வர அனுமதி தேவையில்லை என்றும், அதேசமயம், கர்நாடக அரசின் ‘சேவா சிந்து’ இணையதளத்தில் வருவாதற்கான காரணம், தங்கும் இடம், தொலைபேசி எண்உள்ளிட்ட விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், இதற்க்கு ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில், காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பிற மாநிலங்களில் இருந்து வருவோர், கட்டாயமான முறையில் அவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒரு வேலை தாங்கும் வசதி இல்லையென்றால், கர்நாடகா அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் 7 நாட்கள் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், 10 வயதுக்குள் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால், அரசின் தனிமைப்படுத்தல் மையத்தில் 7 நாட்கள் தங்க வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Join our channel google news Youtube