மதுரை ஜவுளிக்கடை தீ விபத்து! உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்! – முதல்வர் பழனிசாமி

மதுரை ஜவுளிக்கடை தீ விபத்து! உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்! – முதல்வர் பழனிசாமி

தீ விபத்தில் உயிரிழந்த 2 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்.

நேற்று  நள்ளிரவில், மதுரை தெற்கு மாசி வீதியில்  ஜவுளி கடையில், தீ விபத்து ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ வேகமாக பரவியதால், அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.

தீடீரென எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்ற தீயணைப்பு வீரர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள்  சிவராஜன் மற்றும்  கிருஷ்ணமூர்த்தி குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி  அறிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube