• தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • மக்களவை  தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி  தெரிவித்துள்ளார்.

முன்னாள்  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Image result for mk alagiri mk stalin

ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்  திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதேபோல் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில் மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு. வெங்கடேசனும் , கோவை தொகுதியில் முன்னாள் எம்பி பி.ஆர். நடராஜன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

Image result for சு. வெங்கடேசன் அழகிரி

அதேபோல் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மதுரை தொகுதியில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில்  வெங்கடேசன் கருத்துக்கு மதுரை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,மக்களவை  தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பேன்.மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் என்னை சந்தித்து ஆதரவு கேட்டால், பின்னர் முடிவெடுப்பேன்.மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் என்னை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி  தெரிவித்துள்ளார்.