Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடுபாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டருகே வைக்கப்பட்டு இருந்த பாஜக கொடி கம்பத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் போதுபாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் பிரச்சனை செய்து இருந்தார்.

இதில், மாநகராட்சி ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது, அவர்களை தாக்கியது. பொது சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் அமர் பிரசாத் ரெட்டி காவல்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது – அண்ணாமலை

தனக்கு ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு கீழமை நீதிமன்றத்தில் அமர்ப்பிரசாத் ரெட்டி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது .

அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, இனி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பிரச்சனை செய்ய மாட்டேன் என பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, அமர் பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.