ஆக்ரோஷ குரலில் ஒலிக்கும் ‘மாறா’ மேக்கிங் வீடியோ வெளியானது.!

  • சூரறைப்போற்று படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
  • சூர்யா குரலில் உருவாகியுள்ள மாறா படலின் மேக்கிங் வீடியோவை ஜீ.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா காப்பான் திரைப்படத்தை தொடர்ந்து சூரறைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சூர்யாவின் 2D entertainment தயாரித்து வரும் இத்திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக டீசரில் ஒலித்த மாறா theme  உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. ஏனென்றால் இந்த பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ளார். இத்திரைப்படம் கோடைகால விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் படத்தில் சூர்யா குரலில் உருவாகியுள்ள மாறா படலின் மேக்கிங் வீடியோவை ஜீ.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா ஆக்ரோஷத்துடன் பாடியுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.10 விநாடிகள் மட்டுமே அந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதன் முழுப்பாடல் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.