மழைக்காலங்களில் எவ்வளவு பலசாலியான மனிதர்களாக இருந்தாலும், அவர்களையும் பெலவீனப்படுத்தி விடுகிறது இந்த மழைக்கால நோய்கள். மழைக்காலங்களில் வரும் நோய்களான சளி, இருமல் மாறும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தூதுவளை ஒரு சிறந்த மருந்தாகும். இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, பலத்தையும் தருகிறது.

பயன்படுத்தும் முறை :

தூதுவளையை பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம். இந்த இலையை துவையலாகவோ, சாம்பார் மற்றும் தேநீரோடு சேர்த்தோ சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் இந்த இலையை காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, அதனை தினமும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நமது உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் இது தீர்வாக அமையும்.

பயன்கள் :

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து உடனடி விடுதலை தருகிறது. அதுமட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்கிறது. வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுதலை தருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here