வுஹான் ஆய்வு .. குணமாகிய நோயாளிகளில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு.!

வுஹானில் கொரோனா வைரஸில் இருந்து மீண்ட நோயாளிகளில் 90 சதவீதம் பேருக்கு நுரையீரல் முழுவதுமாக சேதம் அடைந்து இருப்பதாகவும் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 
உலகம் முழுவதிலும் தற்பொழுது பெரிய மன வருத்தத்தை கொடுக்கும் ஒன்று என்றால் அது கொரானா வைரஸ் தொற்று. சீனாவிலுள்ள வுஹான் நகரில் இருந்து ஆரம்பமாகி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிலிருந்து அந்நகரம் தப்பித்து விட்டது. இந்நிலையில், சீன மருத்துவத்தின் பல்கலைக்கழகம் மருத்துவர் குழுக்கள் கடந்த ஏப்ரல் முதல் ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு ஜூலை மாதத்துடன் முடிந்த நிலையில், ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், கொரோனாவிலிருந்து குணமாகிய வுஹான் வாசிகளிடம்  நடத்திய ஆய்வில் கொரோனாவிலிருந்து குணமான நோயாளிகளில் 90% பேரின் நுரையீரல் இன்னும் சேதமடைந்து காணப்படுவதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது.
மேலும், குணமாகிய பலர் தற்போது வரை ஆக்சிஜன் கருவிகளை நம்பியே வீட்டில் உயிர் வாழ முடிகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனையில் சாதாரணமாக ஒரு மனிதன் 500 மீட்டர் தூரத்தை கடக்க முடியும் என்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் 400 மீட்டர் மட்டுமே நடக்க முடியும் என்று  59 வயது வரை உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில்  தெரியவந்தது.
மேலும், 65 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வில் 100 நோயாளிகளில் 10 சதவீதத்தினர் தற்பொழுது வரை கொரானா வைரஸ் தொற்று உடையவர்களாக காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
Rebekal