LSGvsMI: மும்பை அணி மரண அடி..! லக்னோ அணிக்கு இமாலய இலக்கு..!

LSGvsMI: மும்பை அணி மரண அடி..! லக்னோ அணிக்கு இமாலய இலக்கு..!

IPLEliminator 2

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs MI எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 182/8 ரன்கள் குவித்துள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டியில் இன்றைய வெளியேற்று சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி, மும்பை அணியில் முதலில் இஷான் கிஷன், ரோஹித் சர்மா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

கேமரூன் கிரீன் அரைசதம் எட்டுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 41 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து, சூர்யகுமாரும் நவீன் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன் ஜோடி விளையாட நேஹால் வதேரா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

முடிவில், மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும், திலக் வர்மா 26 ரன்களும், நேஹால் வதேரா 23 ரன்களும் குவித்தனர். லக்னோ அணியில் நவீன்-உல்-ஹக் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube