SushilModi

எல்பிஜி விலை குறைப்புக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.! பாஜக தலைவர் சுஷில் மோடி பதில்..!

By

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, எல்பிஜி சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நேரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவதோடு, எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் புகார் தெரிவித்து, விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, கடந்த 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது ரூ.417ஆக இருந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1,118 ஆக உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் சிலிண்டர் விலையை கூடுதலாக ரூ.800 உயர்த்தியது பாஜக அரசு, தற்போது ரூ.200 குறைத்துள்ளது. 5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்நிலையில், எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பாஜக தலைவர் சுஷில் மோடி பதில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்புக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த மாதம் பணவீக்க விகிதம் 7 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. இதில் எல்பிஜி சிலிண்டர் முக்கிய பங்கு வகித்தது. எனவே சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.” என்று சுஷில் மோடி தெரிவித்தார்.

Dinasuvadu Media @2023