தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா,புதியதாக 33,764 பேர் பாதிப்பு ,475 பேர் உயிரிழப்பு !

coronavirus

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் 33,764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 475 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,764 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,45,260 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 3,561 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 475 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,815 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 29,717 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 16,13,221 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,72,424 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,68,14,056 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 3,10,224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

corona today