கொரோனா பாதிப்பால் குறைந்த ஜிஎஸ்டி வருவாய்.. ரூ .87,422 கோடி வசூல் .!

கொரோனா பாதிப்பால் குறைந்த ஜிஎஸ்டி வருவாய்.. ரூ .87,422 கோடி வசூல் .!

ஜூலையில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் 87,422 கோடி என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்தமாக ஜூலை மாதத்தில் 87,422 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி 16,147 கோடியும், மாநில ஜிஎஸ்டி 21,418 கோடியும், ஐஜிஎஸ்டி 42,592 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம்  பெறப்பட்ட வருவாய் 20,324 கோடி) மற்றும் செஸ் 7,265 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம்  பெறப்பட்ட வருவாய் 807 கோடி) என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வருவாய் வசூல் ஜூன் மாதத்தை விட குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 90,917 கோடியை வசூலித்திருந்தது. அதுவே 2019  ஜூலை மாதம் ஜிஎஸ்டி 1.02 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அதிகமானோர் வரி செலுத்துவோர் தங்களது வரிக்கணக்கை தாக்கல் செய்ததால் கடந்த மாதம் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்ததாக  மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயில் 86% எனவும், உள்நாட்டு பரிவர்த்தனையின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில்  கிடைத்த வருவாயில் 96% என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan
Join our channel google news Youtube