8 மாதங்களுக்கு ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைந்த ஜிஎஸ்டி வசூல்…!

கடந்த 8 மாதங்களாக  ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய வண்ணம் இருந்த நிலையில், ஜூன் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது.

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலித்து வருகிறது. இந்நிலையில், மத்திய  அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் 92,849 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், ஜூன் 5-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரையிலான உள்நாட்டு பரிவர்த்தனைகளும் அடங்கும். இந்த ஜிஎஸ்டி வரியில், சிஜிஎஸ்டி ரூ .16,424 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ .20,397 கோடியும், ஐஜிஎஸ்டி ரூ .49,079 கோடியும், பொருட்கள் இறக்குமதியில் வசூலிக்கப்பட்ட ரூ .25,762 கோடியும் அடங்கும். சேகரிக்கப்பட்ட மொத்த செஸ் ரூ .6,949 கோடியும், பொருட்கள் இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட ரூ .809 கோடியும் அடங்கும்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு பின்னர், வரி செலுத்துவோருக்கு பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக  ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய வண்ணம் இருந்தது. ஆனால், ஜூன் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்குக் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.