பாதி விலைக்கு மொபைல் தருவதாக மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த காதலர்கள் கைது!

விலை உயர்ந்த மொபைல்களை தாங்கள் பாதி விலைக்கு தருவதாகக் கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்து மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சுதாகர் என்பவர் முகநூலில் தனக்கு விலை உயர்ந்த ஒன் பிளஸ் போன் பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி 29 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதேபோல புதிய மாடல் விலை உயர்ந்த போன் பாதி விலைக்கு வாங்கி தருகிறோம் என கூறி தன் 2,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கிண்டி லேபர் காலனி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சில தினங்களுக்கு முன்பாக அடையாறு சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். தொடர்ச்சியாக அடையாறு சைபர் கிரைமில் இதுபோன்ற புகார்கள் வந்து கொண்டிருப்பதால் இதனை வழக்கு பதிவு செய்த போலீசார் முகநூல் மூலமாக மோசடி செய்த குற்றவாளிகள் யார் என்பதை தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

தற்போது முகநூல் கணக்குகள், பேன் நம்பர் மற்றும் போன் நம்பர்களை வைத்து சோதனை செய்ததில் அப்பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நளினி என்னும் பெண்ணுடையது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்ததில் அவரது காதலன் அரவிந்த் என்பவர் முகநூல் மூலமாக பாதி விலைக்கு மொபைல் வாங்கி தருவதாகவும் தனக்கு கஸ்டம்சில் உள்ள நபர்களை தெரியும் எனவும் கூறி மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது. அரவிந்த் டிப்ளமோ கேட்டரிங் படித்து முடித்துவிட்டு பணம் சம்பாதிப்பதற்கு முகநூலை மோசடி தளமாக பயன்படுத்தியதும், இதற்கு கூட்டாக தனது 12ஆம் வகுப்பு வரை படித்த காதலியையும் உபயோகித்துக் கொண்டு உள்ளது தெரியவந்துள்ளது. இவ்வாறு பிறரிடம் தாங்கள் பாதி விலைக்கு மொபைல் வாங்கி தருவதாக முகநூலில் வருகிற விளம்பரங்களை வைத்து தங்களிடம் சிக்குபவர்களிடம் பணத்தை வசூல் செய்து விட்டு அதன் பின் நம்பர்களை மாற்றி  வந்துள்ளனர். இதுபோல தொடர்ச்சியாக செய்து தாங்கள் விரும்பிய இடத்திற்கு எல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காதலன் மற்றும் காதலி தற்பொழுது அடையாறு சைபர் கிரைமில் பிடிபட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில் ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முகநூல் மோசடியில் ஈடுபட்டு கொடுங்கையூர் காவல் துறையினரால் அரவிந்த் கைது செய்யப்பட்டதும், அவரை அவரது காதலி நளினி ஜாமினில் எடுத்ததும் தெரியவந்துள்ளது. கடந்த மூன்று வருட காலமாக இருவரும் இணைந்து மோசடி செய்து வந்ததும், 50க்கும் மேற்பட்டோர் இவர்களால் பாதிக்கப்பட்டு உள்ளதும், 10 லட்சத்துக்கும் அதிகமாக இவர்கள் மோசடி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. தற்போது இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஏடிஎம் கார்டுகள், மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், மொபைல் போன்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளதுடன் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.

Rebekal

Recent Posts

ஐபிஎல் 2024 : மீண்டும் இணைந்த அஸ்வின் – பட்லர் ! டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு !

ஐபிஎல் 2024 :  ஐபிஎல் தொடர் இன்றைய போட்டியில் தற்போது கொல்கத்தா அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின்-17 வது சீசனில்…

2 hours ago

6000mAh பேட்டரி…அசத்தல் அம்சங்களுடன் இறங்கிய ‘மோட்டோ ஜி 64 5 ஜி’…விற்பனை எகிற போகுது!

Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி  (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு…

3 hours ago

ஷங்கர் மகள் திருமணம்…விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!

Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல். பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்…

3 hours ago

ஐபிஎல் போட்டியில் டாஸ் ஃபிக்சிங்? சர்ச்சையை கிளப்பிய டு பிளெசிஸ் வீடியோ !

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் டாஸ்ஸின் போது டுபிளெசிஸ் செய்த சில சைகையின் வீடியோ ஒன்று கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும்…

3 hours ago

மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது… உச்சநீதிமன்றம்!

Supreme court: மீண்டும் வாக்கு சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்…

4 hours ago

ஒன் மேன் ஷோ! வசூலில் அதிரடி கிளப்பும் ஆவேசம்!

Aavesham : பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படம் உலகம் முழுவதும் 50 கோடி வசூலை கடந்துள்ளது. மலையாள சினிமாவில் இருந்து சமீப காலமாக வெளியான…

4 hours ago