பேரரசன் நெப்போலியன் எழுதிய காதல் கடிதம்…!!

15

பிரெஞ்சு பேரரசன் நெப்போலியன் அவரது காதலி ஜோசபைனுக்கு எழுதியது காதல் கடிதம் குறித்து இந்த காதலர் தினத்தில் நாம் பார்க்கலாம்…

ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தின் பல்வேறு நாடுகளின் கொண்டாட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம் .

உன்னை விட்டு பிரிந்த பின்னர் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் நான். உன்னோடு அருகில் இருப்பது தான் எத்தனை சந்தோசமானது ? ஓயாமல் உன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உன்னுடைய அன்பு மிகுந்த தொடுதல்கள்,கண்ணீர்,பாசம் பொங்கும் அக்கறை எல்லாவற்றிலும் வாழ்கிறேன் நான். ஒப்பிட முடியாத ஜோசபைனின் அழகு மனதில் காதல் தீயை கொழுந்து விட்டு எரிய வைக்கிறது. எல்லா வகையான அக்கறைகளில் இருந்து,கொடுமைப்படுத்தும் கவனிப்புகளில் இருந்து விடுதலை கிடைத்து உன்னோடு என்னுடைய எல்லா பொழுதுகளையும் கழிக்க முடியுமா ? உன்னை மட்டுமே காதலித்துக்கொண்டு, உன்னை மட்டுமே நேசிக்கிறேன் என்று சொல்வதன் உற்சாகத்தை உணர்ந்து கொண்டு,அதை உன்னிடம் நிரூபிப்பதில் வாழ்நாளையே எப்பொழுது கழிக்க முடியும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.