அன்பும் உதவியும் தான் இன்றைய உலகை இயக்குகிறது - கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர்  ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து டுவிட் பதிவு

By Rebekal | Published: May 25, 2020 03:11 PM

நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர்  ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இன்றைய நாள் இஸ்லாமிய மதத்தினர் போற்றும் நாளான ரம்ஜான். இந்நிலையில், நடிகர்கள் அரசியல் வாதிகள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் அன்பு அனைவருக்கும் கிடைத்து, மகிழ்வுடன் கூடி வாழும் ஒரு நாடாவோம். இந்தியர் என இணைவோம். அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு, 

Step2: Place in ads Display sections

unicc