லாட்டரி மார்டினின் ரூ.457 கோடி சொத்துக்கள் முடக்கம்!

இரண்டு நாட்கள் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகு சொத்துக்களை முடக்கி நடவடிக்கை.

லாட்டரி அதிபர் மார்டினினுக்கு சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மே 11, 12-ம் தேதி  லாட்டரி அதிபர் மார்டினினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியிருந்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்டினினுக்கு சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்