மாஸ்டர் படம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை.. லோகேஷ் கனகராஜ்..!

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் ஓடிடி இணையத்தளத்தில்  வெளியாக வாய்ப்பில்லை திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகவல் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக விருந்த இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. அதற்கு பிறகு மாஸ்டர் திரைப்படம் OTT தளத்தில் வெளியாவதாக தகவல்கள் வெளியானது.

மேலும் தற்பொழுது மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் கூறியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஆம் அதில் லோகேஷ் கனகராஜ் கூறியது, மாஸ்டர் திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்றும் திரையரங்குகள் திறந்த பின் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.