மக்களவை தேர்தல்: அமேதி தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்

அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக இந்தியாவில் உள்ள பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம்  வயநாடு தொகுதியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதேபோல் ராகுல் காந்தி உத்திர பிரதேச மாநிலம் மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

வயநாடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து  ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.அவர் கூறுகையில்,தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன் என்றும்  அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார்.

ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று  வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய திறந்தவெளி வாகனத்தில் ராகுல் காந்தியும் ,பிரியங்கா காந்தியும் சென்றனர்.பின்னர் கல்பெட்டாவில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மக்களவவைத் தேர்தலில் அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.அவருடன் அவரது சகோதாரி பிரியங்கா காந்தியும் செல்கிறார்.திறந்த வெளி வாகனத்தில் ராகுல் காந்தியும் ,அவரது தங்கையும் தொண்டர்களின் உற்சாக வரவேற்பில் செல்கின்றனர்.

 

Leave a Comment