கிருஷ்ணகிரியை வட்டமிடும் வெட்டுக்கிளிகள்! அச்சத்தில்மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள்

By leena | Published: May 30, 2020 01:13 PM

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து கொண்டிருந்தன.  இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வெட்டுக்கிளிகள், வட மாநிலங்களில் பயிர்களை கபளீகரம் செய்யும் வகையைச் சேர்ந்தவை அல்ல என்றும் எருக்கஞ் செடிகளில் மட்டும் இருக்க கூடியவை என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், இதுகுறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர், இந்த வகை வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்திற்கு சென்று வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வர் என்றும் தெரிவித்துள்ளார். 

 இந்நிலையில், ஆப்பிரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த வெட்டுக்கிளிகளால் நாட்டில் பேரழிவு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Step2: Place in ads Display sections

unicc