பொதுமுடக்கத்தை ஜூன் 15 வரை நீட்டிக்க உத்தரவிட்ட முதல்வர்.!

மஹாராஷ்டிராவில் பொதுமுடக்கத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளதாக அம்மாநில

By surya | Published: May 30, 2020 06:42 PM

மஹாராஷ்டிராவில் பொதுமுடக்கத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் அறிவித்தார்.

மஹாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்தே வருகிறது. அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 62,228  ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அம்மாநிலத்தில் 2,098 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து அம்மாநில மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், பொதுமுடக்கத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் உத்தரவிட்டுள்ளார். அங்கு விதித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரப்படும் எனவும், ஒருசில தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு தொடரும் எனவும் அறிவித்தார்.

Step2: Place in ads Display sections

unicc