புதுச்சேரியில் சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

புதுச்சேரியில் சில தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், சில தளர்வுகளுடன் மத்திய அரசு ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன்காரணமாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, அம்மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கூட்ட முடிவில், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வை பின்பற்றி புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரியில் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி எனவும், புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கும், மாநிலத்தை விட்டு வெளியே செல்பவர்களுக்கும் இ பாஸ் கட்டாயம் எனவும், பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவை 31-ம் தேதிவரை திறக்கப்படாது என தெரிவித்துள்ளார்.