உள்ளாட்சி தேர்தல் : மநீம நிர்வாகிகளுடன் கமலஹாசன் ஆலோசனை…!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், உள்ளாட்சி தேர்தல் குறித்து, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2019ல் நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில், செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், உள்ளாட்சி தேர்தல் குறித்து, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் 20 பெண் நிர்வாகிகள் உட்பட 60 பேர் கலந்து கொண்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.