உள்ளாட்சித் தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சித் தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல்

  • 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. 
  • இன்று  ஊரக உள்ளாட்சிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  முதலில் தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது .ஆனால் தொகுதி மறுவரையரை பணிகளை முடிக்காமல் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதற்கு எதிராக தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ,புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த  அனுமதி அளித்தது

இதனால் தமிழகத்தில் உள்ள நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதன்படி,இன்று வேட்பு மனுத் தாக்கல்  நடைபெறுகிறது.

Join our channel google news Youtube