எல்.கே.ஜி படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் பிரபுவிற்கு கார் பரிசளித்தார் !!!

  • காமெடி நடிகர்  ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம் எல்.கே.ஜி.
  • தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இந்த படத்தின் இயக்குனர் பிரபுவுக்கு ஒரு புதிய காரை பரிசளித்தார்.
    இந்நிலையில் தயாரிப்பாளர் படக்குழுவிற்கும்  ஒரு சிறப்பு பரிசளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காமெடி நடிகர்  ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம்
எல்.கே.ஜி. இந்த படத்தை இயக்குநர் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிகை பிரியாஆனந்த் நடித்துள்ளார்.
இந்த படம் சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த படத்தின் டிரெய்லரும்,போஸ்டர்களும் மாபெரும் வரவேற்பை பெற்று பாராட்டை குவித்தது குறிப்பிடத்தக்கது.
எல்கேஜி படத்தில் தற்போதைய அரசியல் நிகழ்வுகளை பற்றி பேசி இருப்பதால் இந்த படத்திற்கு  நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த படம் மாபெரும் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் பல இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த படத்தின் வெற்றியை படக்குழு சமீபத்தில் மிகசிறப்பாக கொண்டாடியது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இந்தபடத்தின் இயக்குனர் பிரபுவுக்கு ஒரு புதிய காரை பரிசளித்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் படக்குழுவிற்கும்  ஒரு சிறப்பு பரிசளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment