தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் லிஸ்ட்.!

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்களை

By ragi | Published: Jul 13, 2020 05:57 PM

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்களை குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், தனது சினிமா வாழ்க்கையில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு, பல இன்னல்களை கடந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராக, பாடகராக வளர்ந்து வரும் தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனிடையே இந்தியிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வரும் இவர் ஹாலிவுட்டிலும் களமிறங்கவுள்ளார். தற்போது இவர் அடுத்ததாக நடிக்கும் படங்களை குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த வகையில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் இதோ

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் 'கர்ணன்', கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாகவிருக்கும் 'ஜகமே தந்திரம்', கார்த்திக் நரேன் இயக்கும் 'D43', சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'D44', செல்வராகவன் இயக்கத்தில் 'புதுப்பேட்டை 2' , வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை 2', ராட்சஷன் பட இயக்குநரான ராம்குமார் இயக்கத்தில் சத்யஜோதி தயாரிக்கும் ஒரு படம் மற்றும் இந்தியில் 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் இவர் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. வரும் வருடங்கள் தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc