சத்தான கொண்டைக்கடலை சுண்டல் செய்யும் முறை.
நம்முடைய குழந்தைகள் மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது, தேநீருடன் சேர்த்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று விரும்புவது உண்டு. அப்பொழுது நாம் கடையில் வாங்கிக் கொடுக்கும் உணவுகளைத் தவிர்த்து, வீட்டில் செய்து கொடுக்கக் கூடிய உணவுகளை கொடுப்பதை வழக்கமாக வைக்கவேண்டும்.
தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் முளைகட்டிய கொண்டைக் கடலையை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவேண்டும். பின் இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதனுடன் நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவேண்டும். வதக்கியவுடன் வேக வைத்த கடலையை சேர்த்து கிளறவேண்டும். இறக்கும்போது சாம்பார் பொடி தூவி நன்கு கிளறி இறக்க வேண்டும். இப்பொழுது சுவையான கொண்டைக்கடலை சுண்டல் தயார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…