impostor

உங்கள் மூளையை சோதிப்போம்.! இதில் யார் துரோகி..? கண்டுபிடிங்க பாப்போம்..

By

உங்களின் அறிவுத்திறனை சோதிக்கும் பல புதிரான விளையாட்டுகளை நாம் விளையாடி வருகிறோம். அந்த வகையில் இன்றைய விளையாட்டு உங்களை ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும். இதை நீங்கள் கண்டுபிடிக்க முயற்சிக்கும் பொழுது உங்களுடைய சிந்தனை திறன் அதிகமாகும்.

   
   

இன்று நாம் பார்க்கப் போகும் இந்த புதிரை முயற்சி செய்த நபர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே சரியாக கண்டுபிடித்து பதில் கூறியுள்ளனர். இந்த புதிருக்கான விடையை நீங்களும் கண்டுபிடித்தால், அந்த 5 சதவீத நபர்களில் நீங்களும் ஒருவராக மாறலாம். இப்பொழுது உங்களுக்கான கேள்வி ஆனது புகைப்படத்தின் வாயிலாக கேட்கப்படும்.

இதையும் படிங்களேன்: இதில் யார் குழந்தையின் தந்தை..? உங்கள் பார்வையை சோதிக்கும் ஒரு டெஸ்ட்..!

இந்த படத்தில் மணி ஹெய்ஸ்ட் என்ற வெப் சீரிஸில் வருவது போல, மூன்று பேர் வங்கியின் லாக்கரில் இருக்கும் பணத்தை திருடுகின்றனர். இதில் உங்களுக்கான சவாலான கேள்வி என்னவென்றால், இந்த மூவருள் யார் ‘துரோகி’ என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் கேள்விக்கான பதிலை நீங்கள் கண்டுபிடிக்க உங்களுக்கு 60 வினாடிகள் மட்டுமே வழங்கப்படும். அதற்குள் நீங்கள் பதிலை சரியாக கண்டுபிடிக்க வேண்டும்.

இப்பொழுது உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது..

ஒன்று…. இரண்டு…. மூன்று….

இந்த புதிரைக் கண்டுபிடிக்க நீங்கள் துப்பறிவாளராக மாறி இந்த படத்தை கவனித்தால் உங்களுக்கு சரியான பதில் கிடைத்துவிடும்.

impostor
impostor

இப்பொழுது உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது.

உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பதிலை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பரவாயில்லை இதற்கான பதில் ஆனது கடைசி பத்தியில் கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட நேரத்தில் சரியான பதிலை கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு வாழ்த்துக்கள். இப்பொழுது இதற்கான பதிலை பார்க்கலாம்.

விடை: இந்த மூன்று நபரில் ‘C’ தான் துரோகி.

விளக்கம்:

இதற்கான விளக்கத்தை பார்த்தோமானால் ‘A’ நபர் எந்த தடயத்தையும் விட்டு விடாதவாறு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். ‘B’ நபர் தனது முகத்தைக் காட்டுகிறார். ஆனால், அனைவர்க்கும் தெரியும் லாக்கருக்குள் கேமரா இருக்காது. ‘C’ நபரின் கையை நன்கு கவனித்தீர்கள் என்றால் கையுறை அணியாமல் வந்திருப்பார். இதனால் அவர் லாக்கர் முழுவதும் கைரேகைகளை விட்டு சென்றிருப்பார். இதை வைத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவருடன் வந்தவர்களையும் கண்டுபிடித்து விடுவார்கள். இதனால் இந்த நபர் தான் துரோகி.

impostor
impostor

இதையும் படிங்களேன்: IQ Test: இதில் எந்த சூட்கேஸ் யாருக்கு சொந்தம்.? 10 செகண்டுக்குள் பதில் சொல்லுங்க பார்க்கலாம்..!

Dinasuvadu Media @2023